ஐஸ்வர்யாராயுடன் இணைந்து மீண்டும் டூயட் பாடவிருக்கிறார் ‘காந்த புன்னகை ’நடிகர் மாதவன்.

திருமணத்திற்கு பிறகு தனக்கேற்ற கதைகளை தெரிவு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர் தற்போது ராகேஷ் மெஹ்ராவின் இயக்கத்தில் பான்னி கான் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து நடிக்க நடிகர் மாதவன் தெரிவாகியிருக்கிறார்.

அண்மையில் ஒரு பேட்டியில் காதல் கதைகளில் இனி சொக்லேட் பையனாக நடிக்க மாட்டேன். வயதுக்கேற்ற முதிர்ச்சியுடனான காதல் கதைகளில் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தார். இதனையடுத்து 47 வயதாகும் மாதவன், 43வயதாகும் ஐஸ்வர்யாராயுடன் காதல் காட்சிகளில் நடிக்கவிருக்கிறார்.

தகவல் : சென்னை அலுவலகம்