அகில இலங்கை மக்கள் திலகம் கலை கலாசார சமூக சேவை சங்கமும் கலைஶ்ரீ கலை மன்றமும் இணைந்து நடத்திய "பாடுவோர் பாடலாம் ஆடுவோர் ஆடலாம்" கலை நிகழ்வும் சிரேஷ்ட கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அண்மையில் கொழும்பு 11இல் உள்ள பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
கொழும்பு பிரதேச உப செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கவி பில்ம்ஸ் மற்றும் சங்கவி தியேட்டர்ஸின் தலைவர் "சங்கவி சுரேஷ்" பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அத்துடன் கௌரவ அதிதியாக கலாபூஷணம் இலங்கை பொன்மனச் செம்மல் எம்.எஸ். தாஜ்மஹான் கலந்துகொண்டார்.
கொழும்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ரோஸ் மேரி முன்னிலையில் அரங்கம் நிறைந்த கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இலங்கையின் பிரபல சிரேஷ்ட கலைஞரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக சேவையாளருமான ஜோசப் பெர்னாண்டோ இந்நிகழ்வில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களினால் ஆடல், பாடல் மற்றும் மேடை நாடகங்கள் எனப் பல கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.
இலங்கையின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, ஊடகங்களின் வாயிலாக கலைத்துறையின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய ஊடகவியலாளர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
கலைத்துறையை மங்கவிடாமல் தொடர்ந்து "பாடுவோர் பாடலாம், ஆடுவோர் ஆடலாம்" தொடர் நிகழ்வினை முன்னெடுத்து வரும் கலைஞர் "கலைஸ்ரீ - ஸ்ரீபாலனின்" கலைப் பணிக்கு, இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.






























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM