நான்காவது ஆஷஸ் போட்டியில் அவுஸ்திரேலியாவின் பிரதான வீரர்கள் இருவர் இல்லை; கமின்ஸுக்கு ஓய்வு, லயனுக்கு உபாதை

Published By: Vishnu

23 Dec, 2025 | 06:37 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நத்தார் தினத்துக்கு மறுநாள் ஆரம்பமாகவுள்ள 'பொக்சிங் டே' டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ், சுழல்பந்துவீச்சாளர் நேதன் லயன் ஆகிய இரண்டு பிரதான வீரர்கள் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவது போட்டியில் மட்டுமல்ல ஐந்தாவது போட்டியிலும் அவர்கள் விளையாட மாட்டார்கள் என கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா அறிவித்துள்ளது.

அதிகளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிவந்த பெட் கமின்ஸின் முதுகுப் புறத்தில் கடுமையான வலி ஏற்பட்டதால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் சகலவிதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாடுவதை தவிர்த்துவந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக தற்போது விளையாடப்பட்டு வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் பங்குபற்றாமல் இருந்தார்.

அவர் பூரண உடற்தகுதியைக் கொண்டுள்ளார் என மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

அப் போட்டியில் ஆறு விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் தனது உடற்தகுதியை பெட் கமின்ஸ் நிரூபித்தார்.

அந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா ஆஷஸ் தொடரை கைப்பற்றியது.

ஆஷஸ் தொடரை கைப்பற்றிவிட்டதால் பெட் கமின்ஸுக்கு ஒய்வு கொடுத்து அவரது உடற்தகுதியைப் பேணுவதற்கு அவகாசம் வழங்குவதாக அவுஸ்திரேலிய பயிற்றுநர் அண்ட்றூ மெக்டொனல்ட் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெட் கமின்ஸ் விளையாடுவது உறுதி இல்லை என கருதப்படுகிறது.

இதேவேளை, மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு மற்றும் உபாதை காரணமாக நேதன் லயன், எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட் கமின்ஸுக்குப் பதிலாக ஆஷஸ் தொடருக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து தலைவராக விளையாடவுள்ளார்.

முதல் இரண்டு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்  தலைவராக   விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் 3ஆவது டெஸ்ட் ஆரம்பமாவதற்கு 40 நிமிடங்கள் இருந்தபோது தலைச்சுற்று மற்றும் குமட்டல் காரணமாக அப் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இதேவேளை, மைக்கல் நேசர், போ வெப்ஸ்டர், ப்றெண்டன் டொகெட் ஆகியோர் டெஸ்ட் குழாத்துக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய குழாம் (4ஆவது டெஸ்டுக்கு மாத்திரம்): ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ப்றெண்டன் டொகெட், கெமரன் க்றீன், ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மானுஸ் லபுஷேன், டொட் மேர்பி, மைக்கல் நேசர், ஜய் றிச்சர்ட்சன், மிச்செல் ஸ்டாக், ஜேக் வெதரோல்ட், போ வெபர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்துக்கு கடும் சவால்...

2026-08-10 09:03:03
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவில்...

2026-08-10 08:59:45
news-image

சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம்...

2026-08-09 13:33:39
news-image

ரெட் ஸ்டார் உடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி...

2026-08-09 12:54:45
news-image

மூன்று எல்பிஎல் அத்தியாயங்களில் Jaffnaவிடம் தோல்வி...

2026-08-09 11:13:57
news-image

முகத்துவாரம் குளோபல் சிறுவர் முன்பள்ளி தந்தையர்...

2026-08-08 23:22:32
news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43