6 மாதங்­களில் முழு அமைச்­ச­ர­வையும் இரா­ஜி­னாமாவா.?

Published By: Robert

22 Aug, 2017 | 10:35 AM
image

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தேவை­க­ளுக்கு ஏற்­ற­வ­கையில் செயற்­ப­டாத அரச அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. எனவே நாட்டின் பொதுச் சேவை ஸ்திர­மற்ற நிலையை அடைந்­துள்­ளது என்று  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் மக்கள் சந்­திப்பு நேற்­று­முன்­தினம் குரு­நாகல் பண்­டு­வஸ்­நு­வ­ரவில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் தற்­போது கல்­வித்­து­றையில் உரிய முன்­னேற்­றத்தைக் காண­மு­டி­யா­துள்­ளது. பல்­க­லைக்­க­ழக கட்­ட­மைப்பு மற்றும் அரச சேவை என்­பன நிலை­கு­லைந்­துள்­ளன. இவ்­வா­றான ஸ்திர­மற்ற நிலை­யினை அர­சாங்­கமே தோற்­று­வித்­துள்­ளது. அர­சாங்க அதி­கா­ரிகள் ஆயிரம் பேரை அழைத்து அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­புக்­க­மை­வாக பணி­யாற்­று­மாறும் அல்­லாது போனால் அதி­கா­ரிகள் தமது பத­வியை இரா­ஜி­னாமா  செய்ய வேண்­டி­வரும் எனவும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

மேலும் சிறந்த முறையில் சேவை­யாற்­றிய பல அரச அதி­கா­ரி­க­ளிடம் வாக்­கு­மூலம் பெறப்­பட்­டுள்­ளது. சில அதி­கா­ரி­களை சிறையில் அடைத்­துள்­ளனர். மேலும் சிலரை பதவி விலக்­கி­யுள்­ளனர். ஆகவே நல்­லாட்சி என்­பது பெய­ர­ளவில் மாத்­திரம் உள்­ளது. ஆனால் நடை­பெ­று­வது அதற்குப் புறம்­பான ஆட்­சி­யாகும்.

நல்­லாட்­சி­யி­லேயே பாரி­ய­ள­வி­லான மோசடி இடம்­பெற்­றுள்­ளது. மத்­திய வங்கி பிணை­மு­றி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் சிக்­கிக்­கொள்ளும் தற்­போ­தைய சூழலில் மீண்டும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­ மீதும் அவ­ரது குடும்­பத்­தினர் மீதும் கூட்டு எதிர்க்­கட்­சியினர் மீதும்  குற்­றச்­சாட்­டு­க்களை முன்­வைக்க ஆரம்­பித்­துள்­ளனர். மத்­திய வங்கி பிணை முறி மோச­டியில் ரவி கரு­ணா­நா­யக்­கவின் பெய­ருக்குப் பதி­லாக எனது பெயர் இருந்­தி­ருக்­கு­மாயின் அதற்­கெ­தி­ரான நட­வ­டிக்­கைகள் எவ்­வா­றி­ருந்­தி­ருக்கும் என்று அனை­வ­ருக்கும் தெரியும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி­க­ரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பித்த பின்னர் அர­சாங்கம் அவரை இரா­ஜி­னாமா  செய்­யு­மாறு கேட்­டுக்­கொண்­டது. எனினும் அவர் பதவி வில­கி­யதன் பின்னர் அவரை ஒரு வீர­ராக காண்­பிப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்சிக்கிறது. அத்துடன் அரசாங்கம் தற்போது அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக் ஷ மற்றும் பைஸர் முஸ்தபாவையும் இராஜினாமா  செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு சென்றால் இன்னும் ஆறு மாதங்களில் முழு அமைச்சரவையும் இராஜினாமா  செய்ய வேண்டிவரும்  என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58