கொழும்பு – காங்கேசன்துறை புகையிரத  சேவை நாளை முதல் ஆரம்பம் - புகையிரத திணைக்களம்

Published By: Vishnu

23 Dec, 2025 | 02:58 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பேரிடரால் இடைநிறுத்தப்பட்ட வடக்குக்கான புகையிரத சேவை நாளை புதன்கிழமை (24) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய யாழ்தேவி கடுகதி புகையிரதம் புதன்கிழமை (24) முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை வரை சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் யாழ் தேவி புகையிரதம் புதன்கிழமை (24) காலை 06.40 மணியவில் கொழும்பு கோட்டை  புகையிரத நிலையத்தை நோக்கி புறப்பட்டு, பகல் 02.32 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது.

அதேபோல் புதன்கிழமை (24) காலை 10.30 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் புகையிரதம் மாலை 06.54 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளது.

காங்கேசன்துறை – அநுராதபுரம் வரையிலான யாழ்ராணி புகையிரத சேவை திங்கட்கிழமை (22) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடருக்கு பின்னர் குறுகிய காலப்பகுதியில் வடக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை- மட்டக்களப்புக்கான புகையிரத சேவை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52
news-image

எரிபொருள் கியூ.ஆர் குறியீடு முறை முழுமையாக...

2026-03-15 16:04:28