சிரேஸ்ட சட்டத்தரணியை தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தனது செயலாளர் நாயகமாக வைத்துக்கொண்டு,சில நடவடிக்கைகளை நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) எடுத்துள்ளார்கள்.

குறிப்பாக நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) எனது கட்சியின் அடிப்படை உரிமையினை எதிர்வரும் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் ஒரு சில விடையங்களை மக்களுக்கு தெழிவுபடுத்த வேண்டிய  அடிப்படையிலும் சில சட்ட நகர்வுகளை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றேன் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

அந்த வகையில் பகிரங்கமாகவே எனது கட்சியிடம் கேட்கின்றேன் ஒரு கட்சியில் அடிப்படை உரிமை இல்லாத நபர் ஒருவருக்கு எதிராக 6 மாதம் தற்காலிக இடை நிறுத்தம் செய்ய முடியுமா?

முதலில் எனது கட்சியின் அடிப்படை உரிமையினை நிறுபியுங்கள். அதன் பின்னர் சட்ட ரீதியாக உங்கள் யாப்பின் அடிப்படையில் இருக்கும் விதிகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

தனக்கு எதிராக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மேற்கொண்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே டெனீஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.