உக்ரைன் மீது 1300 ட்ரோன் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா ; போர், தொடங்கிய இடத்துக்கே திரும்பும்! - உக்ரைன் ஜனாதிபதி  

22 Dec, 2025 | 11:39 AM
image

கடந்த வாரம் உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 1300 ட்ரோன் தாக்குதல்கள், 1200 வான்வழிக் குண்டுத் தாக்குதல்கள், 9 ஏவுகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

இந்தத் தாக்குதல்களில் உக்ரைனின் ஒடேசா பகுதியும் நாட்டின் தெற்குப் பிராந்தியங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். 

தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர பல்வேறு துறைகளில் சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

“ரஷ்யாவின் பயங்கரவாதத் தாக்குதல்களை பல்வேறு மட்டங்களில் உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனின் நிதிப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பல நாடுகளும் நிதி உதவி அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. 

2026 - 2027 ஆண்டு காலப்பகுதிக்கு ஐரோப்பிய கவுன்சில் (European Council) 90 பில்லியன்  யூரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நோர்வே, ஜப்பான் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. போர்ச்சுக்கல் நாட்டுடனான கடல்சார் ட்ரோன் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. 

உக்ரைன் - ரஷ்யா போரை அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக நாமும் தேவைக்கேற்ப செயற்பட்டு வருகிறோம். 

போர் எந்த லாபத்தையும் தந்துவிடாது. எங்கிருந்து போர் தொடங்கியதோ, அங்கேயே அது திரும்பப் போய் நிற்கும் என்பதை போரைத் தொடங்கியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்க அரோவானா மீனைப் போன்று வடிவமைக்கப்பட்ட...

2026-09-15 14:40:32
news-image

ட்ரம்பின் சிறுவயது வீடு சுமார் 2...

2026-09-15 12:18:53
news-image

கொங்கோ பாடசாலையில் பயங்கர தீ! ;...

2026-09-15 11:31:00
news-image

லிபியாவின் மிஸ்ராதா விமான நிலையத்தில் தனியார்...

2026-09-15 10:37:54
news-image

ஈரானில் சிரேஷ்ட மதகுரு மௌவி யூசுப்...

2026-09-15 11:22:35
news-image

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட...

2026-09-14 18:03:38
news-image

தென்னாபிரிக்காவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2026-09-14 17:32:32
news-image

“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்”...

2026-09-14 13:56:20
news-image

“கவிழ்ந்த படகின் அடியில் இன்னும் என்...

2026-09-14 12:24:17
news-image

இந்தோனேஷிய பயணிகள் கப்பல் விபத்து: உயிரிழந்தோரின்...

2026-09-14 11:58:33
news-image

2027க்கான பிரிக்ஸ் தலைமையை ஏற்றது சீனா

2026-09-14 12:02:27
news-image

சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ...

2026-09-14 10:37:10