வவுனியாவில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் உட்பட மூன்று  இளைஞர்களை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வேப்பங்குளம் பட்டக்காடு நெளுக்குளம் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த இளங்கேஸ்வரன் அனுசாந்தன் என்ற பத்து வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரரான இளங்கேஸ்வரன் விஜித்தகுமார் வயது 18 என்பவருடன் வவுனியா நெளுக்குளம் குகன் நகர் பகுதியைச் சேர்ந்த இருபது வயதான விஜயகுமார் விஜயசாந்தன் என்பவரும் சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் எவருமற்ற  வீடுகளில் சிறுவனின் உதவியுடன் வீடுகளில் காணப்படும் சிறிய துளைகள் ஊடாக சிறுவனை வீட்டினுள்புகுத்தி கொள்ளைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலும் இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் அத்துடன் 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தையும் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விசாரணைகளின் பின்னர்  இவர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.