(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் 2025 - 26 சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் நடப்பு சம்பியன் மாத்தறை சிட்டி கழகத்தைத் தொடர்ந்து நடப்பு உப சம்பியன் ஜாவா லேனும் தனது ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்தது.
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பி குழுவுக்கான போட்டியில் பலம்வாய்ந்த பொலிஸ் கழகத்திடம் மாத்தறை சிட்டி கழகம் 0 - 5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

இதே மைதானத்தில் நேற்று இரவு மின்னொளியில் நடைபெற்ற ஏ குழுவுக்கான போட்டியில் மாவனெல்லை செரண்டிப் கழகத்திடம் 0 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் ஜாவா லேன் கழகம் இறுக்கமான தோல்வியைத் தழுவியது.
இந்த வாரத்துக்கான போட்டிகளில் மிக முக்கியமான இந்தப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பு மிக்கதாக அமைந்தது.
இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடிய போதிலும் கோல்களைப் போடுவதில் இலக்குகளைத் தவறவிட்ட வண்ணம் இருந்தன.
இப் போட்டியின் 29ஆவது நிமிடத்தில் மொஹமத் பர்ஹான் போட்ட கோல் செரெண்டிப் கழகத்தின் வெற்றி கோலாக அமைந்தது.
இந்த கோலினால் உற்சாகம் அடைந்த செரெண்டிப் கழகம் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க கடுமையாக முயற்சித்தது. அதேவேளை இந்த கோலினால் துவண்டு விடாமல் கடுமையாக போட்டியிட்ட ஜாவா லேன் கழகம் கோல் நிலையை சமப்படுத்த முயற்சித்தது.
ஆனால் இரண்டு அணிகளும் கோல் போடக்கூடிய பல வாய்ப்புகளைத் தவறவிட்டதுடன் இரண்டு அணிகளினதும் பின்கள வீரர்களும் கோல்காப்பாளர்களும் தங்களாலான அதிகப்பட்ச திறமைகளை வெளிப்படுத்தி கோல் போடப்படுவதை தடுத்த வண்ணம் இருந்தனர்.
இப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பி குழு போட்டியில் மொரகஸ்முல்லை கழகத்தை எதிர்கொண்ட தர்காநகர் சுப்பர் சன் கழகம் 7 நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் போட்டு வெற்றியீட்டியது.

சுப்பர் சன் கழகத்தில் நான்கு ஆபிரிக்கர்கள் விளையாடியதுடன் அந்த நால்வரில் ஒருவரே அணித் தலைவராக விளையாடினார்.
ஆனால், வெளிநாட்டவர்கள் இல்லாமலேயே மொரகஸ்முல்லை கழகம் திறமையை வெளிப்படுத்தி சுப்பர் சன் கழகத்தைக் கட்டுப்படுத்திய வண்ணம் இருந்தது.
எவ்வாறாயினும் போட்டி இடைவேளையை நெருங்கிக்கொண்டிருந்தபோது 7 நிமிட இடைவெளியில் சுப்பர் சன் கழகம் இரண்டு கோல்களைப் போட்டு ஆட்டத்தை தன்பக்கம் திருப்பியது.
நைஜீரிய நாட்டவரான இஸ்மைலா அபுமியர் 40ஆவது நிமிடத்திலும் 45 + 2ஆவது நிமிடத்திலும் கோல்களைப் போட்டு சுப்பர் சன் கழகத்தின் வெற்றிக்கு வித்திட்டார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆட்டநேர பகுதியில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன. ஆனால் மேலதிக கோல் எதுவும் போடப்படவில்லை.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM