இந்திய அணித் தலைவர் விராட் கோலியும் அவரது பெண் தோழியுடான அனுஷ்கா சர்மாவும் இணைந்து இலங்கையில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த புகைப்படங்கள் இணையங்களில் உலாவி வருகின்றது.

மரக்கன்றுகளை அவர்கள் தங்கியிருந்த ரிசோர்ட் ஒன்றில் நாட்டி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு கோலி தலைமையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிளைக் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந் நிலையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, ஒரு போட்டியைக் கொண்ட இருபதுக்கு -20 போட்டியிலும் விளையாடவுள்ளது.