எம்முடைய மாணவ மாணவியர்களில் பலர் கல்லூரிகளில் அறிவியல் பிரிவில் படிக்கும் போது வேதியல் பாடதிட்டத்திற்கான பரிசோதனைக்காக ஆய்வுக்கூடங்களுக்கு செல்வதுண்டு. அங்கு எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்படுவதுண்டு. அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளித்து அவர்களை காப்பாற்றினாலும், இந்த விபத்தால் ஏற்பட்ட தழும்புகள் எளிதில் மறைவதில்லை.
‘ஹைபர் ட்ராபிக் ’ எனப்படும் இத்தகைய தழும்புகள் 6 மாதத்தில் பரவுவது நின்றுவிடும். ஆனால் ‘கீலாய்ட் ’ எனப்படும் தழும்புகள் 6 மாதத்திற்கு பின்னரும் மறையாது வளர்ந்துகொண்டேச் செல்லும். இந்த கீலாய்ட் தழும்புகள் தான் பாதிக்கப்பட்ட பகுதியைக் கடந்தும் சாதாரண பகுதிகளிலுள்ள திசுக்களையும் தாக்குகிறது.
திசுக்கள் இறுக்கமடைவதால் அவை இயல்பாக செயல்படமுடிவதில்லை. அத்துடன் அதனருகே இருக்கும் நரம்புகளும் அதன் இயல்பான செயல்பாட்டில் தடையேற்படுகின்றன. இதனால் வலி தொடர்கிறது. இதற்காக தற்போது HBOT என்ற சத்திர சிகிச்சையற்ற சிகிச்சையும், ‘ஸ்கார் விகார் ’என்ற சத்திர சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது. இதன் மூலம் தழும்புகளை முழுமையாக அகற்றிவிடலாம். அவ்விடத்தின் நிறத்தை சருமத்தின் இயல்பான நிறத்திற்கு மாற்றியமைத்துவிடலாம். தழும்புகளின் பாதிப்புகளை மென்மையாக்கிவிடலாம்.
வைத்தியர். ஹயாஸ் அக்பர்
தொகுப்பு அனுஷா.,
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM