பொலித்தீன் உற்பத்தியாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொலித்தீன் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் புறக்கோட்டையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குணசிங்கபுர பேருந்து தரிப்பிடத்துக்கு முன்னால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.