கொட்டகலை பாத்தியாபுர கிராமப் பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரத்தில் அதிக மின் வலுகொண்ட மின்சாரம் பாய்ந்ததால் அக் கிராமத்திலுள்ள 25 வீடுகளில் மின்சார உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தீடீரென ஏற்பட்ட மின்வலு அதிகரிப்பினால் இந்த மின்சார உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் ஒவ்வொரு வீடுகளிலும் பெறுமதியான மின்சார உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.

குறிப்பாக தொலைக்காட்சிப் பெட்டி, கணனி, குளிர்சாதனப் பெட்டி, வானொலிப் பெட்டி ஆகியன செயலிழந்துள்ளன. இதற்கென பாரிய தொகையினை செலவு செய்து திருத்தி கொள்ள வேண்டும் எனவும், இதனால் தாம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.