இந்­திய, இலங்கை அணி­க­ளுக்­கி­டை­யி­லான முதலாவது ஒருநாள் போட்­டியில் இலங்கை தோல்வி அடைந்­த­தை­ய­டுத்து மைதா­னத்தில் குழு­மி­யி­ருந்த ரசிகர்கள்  நேற்று மாலை தம்­புள்ளை ரங்­கிரி விளை­யாட்டு மைதா­னத்­திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதனால் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

போட்டி முடிந்­த­வுடன் இலங்கை அணி ரசி­கர்கள் வீரர்­களுக்கு எதிராக கூச்­ச­லிட்டும் ஆர்­ப்பாட்ட தோர­ணையில் முற்­று­கை­யிடும் வண்­ண­மாகவும் குழு­மி­யி­ருந்­தனர். இதன்­போது கலகம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்­திற்கு அழைக்­கப்­பட்­டனர்.

பொலி­ஸாரின் உத­வி­யுடன் இந்­திய அணி வீரர்கள் பாது­காப்­பாக ஹோட்­ட­லுக்கு கொண்டு செல்­லப்­பட்ட போதும் இலங்கை அணி வீரர்­களை மைதா­னத்­துக்கு வெளியே வர விடா­மலும் அவர்கள் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லுக்கு முன்பும் இலங்­கை ­அணி ரசிகர்கள் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர்.

இலங்கை கிரிக்­கெட்டில் இருப்­ப­தாக கூறப்­படும் அர­சியல் ஊடுரு­வலை இல்­லாமல் ஆக்கக்கோரியும் ஆட்ட நிர்­ணய சதி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்து இலங்கை கிரிக்கெட் ரசி­கர்கள் வீரர்­களை பார்த்து கோஷங்­களை எழுப்­பி­னர்.

மேலும் 1996 ஆம் ஆண்டில் உலகக்கோப்­பையை வென்ற அணியை போன்று தலை­சி­றந்த இலங்கை கிரிக்கெட் அணியை மீண் டும் தமக்கு தர வேண்டும் என்றும் ரசிகர்கள் கோஷமிட்டனர்.

இதன்போது சுமார் அரை மணிநேரத்­துக்கு மேலாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட ரசி­கர்கள் வீரர்­களை ஹோட்­ட­லுக்கு செல்­ல­வி­டாது தொடர்ந்தும் இடை­ம­றித்­தி­ருந்­தனர். இந்த பதற்­ற­மான சந்­தர்ப்பம் தோன்­றி­யி­ருந்த நிலையில் இலங்கை அணியின் வீரர்கள் பஸ்­ஸினுள் ஏற முடி­யாமல் மைதா­னத்தின் உள்­ளேயே நிற்கும் நிலை ஏற்ப­ட்­டி­ருந்­தது.

அதன் பின்னர் ரசிகர்களின் ஆர்ப்­பாட் டத்தை கலைத்த  கலகம் அடக்கும் பொலி­ஸாரின் உத­வி­யுடன் இலங்கை அணி வீரர்­களும் பாது­காப்­பான முறையில் ஹோட்­ட­லுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

இதற்கு முன்னர் இந்­திய அணி­யுடன் இடம்­பெற்ற டெஸ்ட் போட்­டி­யிலும் 3 – 0 என்ற வீதத்தில் வெள்­ளை­ய­டிப்புச் செய்­யப்­பட்­டி­ருந்த இலங்கை அணி­யா­னது நேற்­றைய தினம் இந்திய அணியுடனான ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுக்களை இழந்து தோல்வி அடைந்திருந்த நிலையில் கடும் விரக்தி அடைந்திருந்த ரசிகர்களே பொறுமை இழந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.