அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக செயற்படுத்துங்கள் இல்லையேல் விளைவு பாரதூரமானதாக அமையும் - எஸ்.எம்.மரிக்கார்

Published By: Vishnu

18 Dec, 2025 | 07:31 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நத்தார் தாத்தாவை போன்று நிவாரண வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார். தேர்தல் காலத்தில் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கினீர்கள். அதனை தற்போது மறந்து விட்டீர்கள். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளீர்கள். அவற்றை முறையாக செயற்படுத்துங்கள் இல்லையேல் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த  சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அனர்த்தத்தால்  சேதமடைந்த  வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை  புனரமைக்க  250 பில்லியன் ரூபா இந்த குறைநிரப்பு பிரேரணையில் ஒதுக்கப்பட்டுள்ளது.  உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான தெரிவுக்குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது  வீதி அதிகார சபைக்கு  வீதிகளை புனரமைப்பதற்கு மாத்திரம் 190 பில்லியன் ரூபா தேவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 புகையிரத திணைக்களத்தின் நட்டம் இன்றளவில் மதிப்பிடப்படவில்லை. இலங்கை மின்சார சபை 20 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் குறைநிரப்பு பிரேரணையில் அது பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. 100 மில்லியன் டொலர் கடன் பெற எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு கடன் பெற்றால் மின்கட்டணத்தை  மீண்டும் அதிகரிக்க நேரிடும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நத்தார் தாத்தாவை போன்று நிவாரண வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார். தேர்தல் காலத்தில் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கினீர்கள்.அதனை தற்போது மறந்து விட்டீர்கள். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளீர்கள். அவற்றை முறையாக செயற்படுத்துங்கள் இல்லையேல் விளைவு பாரதூரமானதாக அமையும்.

கொழும்பு மாவட்டத்தில் பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெருமளவிலானோருக்கு  முழுமையாக நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை. கொழும்பில் தேங்கியுள்ள குப்பைகள் கூட முழுமையாக அகற்றப்படவில்லை. இந்த அனர்த்த நிலைமையின் போது அரசாங்கம் தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டது. தற்போதும் அவ்வாறே செயற்படுகிறது. எவரது ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.இந்த நிதி வழங்கலிலும் பல முறைகேடுகள் காணப்படுகின்றன. இந்த கொடுப்பனவை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குங்கள்.இந்நடவடிக்கையை இவ்வாரத்துக்குள் நிறைவு செய்யுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின்வெட்டு ஏற்படாது: அமைச்சர்...

2026-08-14 09:34:10
news-image

வத்தளை துப்பாக்கிச் சூடு ; இந்தியாவுக்குத்...

2026-08-14 09:28:27
news-image

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவில்லை –...

2026-08-14 09:18:30
news-image

இன்றைய வானிலை 

2026-08-14 09:17:07
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13