மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த லெதம், கொன்வே சதங்கள் குவித்து அசத்தல்

18 Dec, 2025 | 06:27 PM
image

(நெவில் அன்தனி)

மெற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மௌன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து ஓட்ட மழை குவித்து  பலமான நிலையில் இருக்கிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து, ஆரம்ப வீரர்கள் பெற்ற சதங்களின் உதவியுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 334 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 323 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டம் இழந்த டொம் லெதம் 246 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 137 ஓட்டங்களைக் குவித்தார்.

91ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் டொம் லெதம் பெற்ற 15ஆவது சதம் இதுவாகும்.

மறுபக்கத்தில் 279 பந்துகளை எதிர்கொண்ட டெவன் கொன்வே 25 பவுண்டறிகள் அடங்கலாக 178 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.

இது அவர் பெற்ற 6ஆவது டெஸ்ட் சதமாகும்.

கொன்வேயுடன் களத்திலிருக்கும் ஜேக்கப் டவி 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந் நிலையில் மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரை சமப்படுத்த முடியும் என்ற நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் களம் இறங்கியது.

ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை.

மைல்கல் சாதனைகள்

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் ஜோடியாக 86.4 ஓவர்கள்வரை துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய பந்துவீச்சாளர்களை நையப்புடைத்தனர்.

அவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 323 ஓட்டங்களானது நியூஸிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்ப விக்கெட்டில் பகிரப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாகும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஜோர்ஜ்டவுனில் 1979இல் க்ளென் டேர்னர், டெரி ஜாவிஸ் ஆகிய இருவரும் பகிர்ந்த 387 ஓட்டங்களே ஆரம்ப விக்கெட்டுக்கான நியூஸிலாந்தின் முந்தைய அதிகூடிய எண்ணிக்கையாகும்.

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் பகிர்ந்த 323 ஓட்டங்களானது சொந்த மண்ணில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட முதலாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாகும்.

இதற்கு முன்னர் 1930இலும் பின்னர் 1999இலும் முதலாவது விக்கெட்டில் பகிரப்பட்ட 276 ஓட்டங்களே முந்தைய சாதனையாக இருந்தது.

கொன்வே பெற்ற ஆட்டம் இழக்காத 178 ஓட்டங்களானது முதலாம் நாளில் பெறப்பட்ட தனிநபருக்கான 3ஆவது அதிகூடிய எண்ணிக்கையாகும்.

இலங்கைக்கு எதிராக 214இல் ப்றெண்டன் மெக்கலம் பெற்ற 195 ஓட்டங்களும் பங்களாதேஷுக்கு எதிராக 2022இல் டொம் லெதம் பெற்ற ஆட்டம் இழக்காத 186 ஓட்டங்களும் இதற்கு முன்னர் நியூஸிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டி ஒன்றில் முதலாவது நாளில் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கைகளாகும். இவை இரண்டும் கிறைஸ்ட்சேர்ச்சில் பதிவான மைல்கல் சாதனைகளாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட...

2026-09-12 03:07:12
news-image

ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட்டில்  பங்குபற்றவுள்ள...

2026-09-12 01:48:15
news-image

நியூ யங்ஸை வெற்றிகொண்டு சுப்பர் லீக்கில்...

2026-09-11 21:08:42
news-image

இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்திப்பது இலங்கையா?...

2026-09-11 19:03:22
news-image

பங்களாதேஷை வீழ்த்தி மகளிர் ரி20 ஆசிய...

2026-09-11 15:57:35
news-image

நாவலப்பிட்டியில் மாணவர்களுக்கு இலவச கால்பந்து பயிற்சி!

2026-09-11 14:22:48
news-image

சுப்பர் லீக் முதல் சுற்றை ஆறுதல்...

2026-09-10 20:41:01
news-image

இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இரண்டு பயிற்சிப்...

2026-09-10 19:35:15
news-image

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்...

2026-09-10 17:35:42
news-image

ஹர்மன்பிரீத் கவுர் தலைகீழாக பாய்ந்து பிடித்த...

2026-09-10 17:05:27
news-image

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும்...

2026-09-10 16:31:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும்...

2026-09-10 13:58:38