காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் கத்திக்குத்து : தாக்குதலை மேற்கொண்டவர் பொலிஸில் சரண்

Published By: Digital Desk 2

18 Dec, 2025 | 04:57 PM
image

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கத்தி குத்து தாக்குதலில் 25 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்துள்ளார். 

காத்தான்குடி  பொலிஸ் பிரிவின் காத்தான்குடி 06 அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் சம்பவ தினமான இன்று காலையில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு உள் நுழைந்த இளைஞன் ஒருவர் குறித்த இளைஞர் மீது கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும்  கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே  ஒரு சில தினங்களாக வாய்த்தர்க்கம் மற்றும் கைகலப்பு ஆகியன இடம்பெற்று வந்த நிலையிலேயே இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு  விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து...

2026-04-21 15:41:48
news-image

கால்நடைகள் மீது காரைநகரில் அடாவடி ;...

2026-04-21 15:41:27
news-image

பயாகலையில் “குடு சலிந்துவின்” நெருங்கிய சகாக்கள்...

2026-04-21 15:26:29
news-image

பிள்ளையான் மீதான உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள்...

2026-04-21 15:26:07
news-image

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு...

2026-04-21 15:22:29
news-image

மாகும்புரவில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையுடன் புதிய...

2026-04-21 15:16:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிபந்தனையற்ற நீதி...

2026-04-21 14:58:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல்...

2026-04-21 14:50:48
news-image

'கஞ்சிபானை இம்ரான்' உடன் தொடர்புடைய முக்கிய...

2026-04-21 14:49:33
news-image

வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த...

2026-04-21 14:49:11
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-04-21 14:05:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : தற்போதைய...

2026-04-21 13:29:54