எதிர்கட்சியினர் அனர்த்த நிலைமையையும் தமது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர் - அன்டன் ஜயகொடி

18 Dec, 2025 | 06:45 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசியல் தீர்மானங்களுக்கமைய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படவில்லை. தொழில்நுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டே நீர்ப்பாசனத் திணைக்களம் வான்கதவுகளை திறந்தது. எதிர்கட்சியினர் அனர்த்த நிலைமையையும் தமது அரசியல் இலாபத்துக்காக  பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த  சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம். ஏற்பட்ட உயிரிழப்பை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வழிகளில் நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டையும், நாட்டு  மக்களையும் விரைவாக மீட்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி  தெரிவித்துக் கொள்கிறோம்.

மலையகத்தில்  அடிக்கடி மண்சரிவு பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படுகிறது.இவ்வாறான பின்னணயில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆலோசனைக்கு அமைவாகவே இனி மலையகத்தில் குடியிறுப்புக்களை நிர்மாணிக்க வேண்டும். தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் புதிய குடியிறுப்புக்கள் நிர்மாணிக்கப்படும்.

 அரசியல் தீர்மானங்களுக்கமைய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படவில்லை. தொழில்நுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டே நீர்பாசனத் திணைக்களம் வான்கதவுகளை திறந்தது. எதிர்கட்சியினர் அனர்த்த நிலைமையையும் தமது அரசியல் இலாபத்துக்காக  பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினர்  பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். வான்கதவுகள் திறக்கப்பட்டமைக்கும், அரசியல் தீர்மானத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. காலநிலை  தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நீர்பாசனத் திணைக்களம்   செயற்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58