மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா

18 Dec, 2025 | 03:55 PM
image

(நெவில் அன்தனி)

அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ், ஜொவ்ரா ஆச்சர் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் போராடி வருகின்ற போதிலும் இங்கிலாந்து மற்றொரு மோசமான முடிவை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவை விட 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து பின்னிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றது.

தனது துடுப்பாட்டத்தை 33 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து மிச்செல் ஸ்டார்க்   தனது 13ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அவர் 54 ஓட்டங்களைப் பெற்து 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஸ்கோட் போலண்ட் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் முதலாம் நாளன்று அலெக்ஸ் கேரி 106 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 92 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜோவ்ரா ஆச்சர் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றி தனது நான்காவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

அவரைவிட ப்றைடன் கார்ஸ் 89 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 45 ஓட்டங்களுடனும் ஜொவ்ரா ஆச்சர் 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்ததுடன் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

அவர்களை விட ஹெரி ப்றூக்ஸ் 45 ஓட்டங்களையும் பென் டக்கெட் 29 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் லயன் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் சஞ்சு செம்சன்...

2026-04-12 00:43:44
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி 3ஆவது வெற்றியை...

2026-04-11 23:46:46
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடான ஒருநாள் தொடரை ...

2026-04-11 23:37:22
news-image

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு 3ஆவது நேரடி...

2026-04-11 00:50:58
news-image

ஒலிம்பிக் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை...

2026-04-10 17:20:37
news-image

39 விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட போட்டியில் கண்டியை...

2026-04-10 16:54:40
news-image

ஆசிய மல்யுத்த தேர்வுப் போட்டியில் பிரகாசித்த...

2026-04-10 16:49:45
news-image

கணிசமான மொத்த ஓட்டங்கள் பெறப்பட்ட தம்புள்ளை-கொழும்பு...

2026-04-10 16:02:34
news-image

சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் 9...

2026-04-10 13:21:07
news-image

முகுல் சௌதரியின் ஆட்டம் இழக்காத அரைச்...

2026-04-10 04:54:36
news-image

காருண்ய பணிக்காக ஏலம் விட்ட ஒலிம்பிக்...

2026-04-10 04:50:20
news-image

தனி உலக மரதன் சம்பியன்ஷிப் ;...

2026-04-09 17:05:46