கண்டி - உடதும்பர பகுதியில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகளவு மழை பெய்துவருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உடதும்பர பகுதிக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களையும் அபாயகரமான இடங்களுக்குச் செல்வதையும் தவிர்க்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மழை நிலைமை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடதும்பர, மடதும்பர மற்றும் மினிப்பே ஆகிய இடங்களுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தந்தஹின்ன மற்றும் மதுரட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடுகள் மற்றும் கட்டடங்களில் விரிசல்கள் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும், அண்மைய நாட்களில் பெய்த பலத்த மழையால் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதாகவும் அதனால் அபாயகரமான பகுதிகளில் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM