தெல்தெனிய பேஸ்புக் களியாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட 21 இளைஞர்களுக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
தெல்தெனிய - விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 21 இளைஞர்களுக்கு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்களது குற்றங்களுக்கேற்ப 5000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்தில் ஆஜராகாத இரண்டு இளைஞர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேஸ்புக் களியாட்டத்தில் இணைந்துகொண்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு, எதிர்வரும் 07.06.2026 திகதியன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த 27 பேரும் கடந்த வாரம் தெல்தெனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தெல்தெனிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, தலா இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM