முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற சம்பவம் - கைதான நால்வருக்கும் பிணை

Published By: Digital Desk 2

18 Dec, 2025 | 12:02 PM
image

களுத்துறை - பயாகலை பிரதேசத்தில் முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் நால்வரும் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற இருவர் களுத்துறை - பயாகலை பிரதேசத்தில் வைத்து வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த செவ்வாய்க்கிழமை (16) கைதுசெய்யப்பட்டனர். 

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் உபுல்வெஹெர பிரதேசத்தில் வசிக்கும் 27 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கைதான சந்தேக நபர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் இரண்டு பேர் 16ஆம் திகதி இரவு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நேற்று (17) கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, தலா 80 ஆயிரம் ரூபாய் வீதம் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:12:12
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57