அனர்தகால உதவிகளை மக்களுக்கு சென்றடைவதை அரச உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி பாதிக்கப்பட்ட மக்கள் அலைகழிக்க கூடாது எனத் தெரிவித்தார்.
கரவெட்டி பிரதேசெயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியமை தொடர்பில் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும்பேதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர்மேலும் தெரிவிக்கையில்,
அனத்தத்தால் பாதிக்கப்பட்டவர்குக்கு உதவிகளை அரசாங்கம் செய்கிறது அதனை உரிய மக்களுக்கு கொண்டு செல்லவேண்டிய அரச அதிகாரிகள் சாட்டு போக்கு கூறிவருகிறார்கள் நேரில் வந்து பார்காது விபரங்களை பதிவிட்டு இருக்கிறார்கள் அனர்த நேரத்திலுகூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாது இருந்துள்ளார்கள். இதற்கு யார் பொறுப்பு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட அனைத்து உதவிகளையும் சென்றடை செய்யவேண்டும் அரச உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்யவேண்டும் உயர் அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும்.
நாட்டில் ளற்பட்ட டித்வா வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் பல இழப்புகளை துன்பங்களை சந்தித்துள்ளனர். அத்தகைய மக்களை மீண்டும் மீண்டும் துன்பத்திற்குள் வைத்திருக்க முடியாது . இத்தகைய சூழலில் அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முடிந்தளவு உதவிகளை செய்வதற்கு முன்வந்து அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பது தொடர்பில் சுற்று நிருபம் வெளியிட்டுள்ளது . இத்தக்கய நிலையில் யாழ் மாவட்டத்தில் ஒவ் வோரு பிரதேச செயலர் பிரிவிலும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது.
இந்த பிரச்சினைகள் மக்கள் மத்தியில் செயல்படுகின்ற அரச உத்தியோகத்தர்கள் நேரில் சென்று நிலமைகளை அவதானிக்கமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வழமையாக அனர்த்தம் நிகழ்ந்தால் ஒரு விபரங்களை வைத்திருப்பது போல் சில விபரங்களை வைத்து பாதிப்படைந்த நபர்கள் என அடையாளம் காட்டியுள்ளார்கள் .
மக்கள் பிரதிநிதியாக செயற்படும் நான் தேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடுகின்ற போது தான் அரச உத்தியோகத்தர் எவ்வீறு மக்களுடன் கலந்துரையாடுகிறார்களா நேரில் வியஜம் செய்தார்களா என்பமை அறியகூடியதாக உள்ளது எத்தகைய மனநிலையில் வேலைசெய்கிறார்கள் என்பதும் அறியகூடியதாக உள்ளது.
அரசாங்கம் செய்கின்ற உதவிகளை மக்களுக்கு முறையாக கிடைப்பதற்கு வழிசெய்யமுடியவில்லை என்றால் அரச உத்தியோகத்தர் மனநிலை எத்தகையது இதில் யாரைபிழை செல்வது . பாதிக்கப்பட்ட மக்கறுக்கு அரசாங்கம் செய்கின்ற உதவிகள் முழுமையாக சென்றடைய வேண்டும்.
கிராம மட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சரியாக செய்யவேண்டும் அதனை அவதானிக்கும் பொறுப்பு உயர்அதிகாரிகளுக்கு உண்டு கரவெட்டி பிரதேச செயலர்பிரிவில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது எனைய பிரதேசங்களின் நிலமை எவ்வாறு இருக்கும் மக்களுக்கான உதவிகள் அவர்களுக்கு சென்றடையவேண்டும் அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கு ஏற்ப காலதாமத மின்றி அவைசென்றடைய வேண்டும் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM