நீண்ட காலமாக சரியான தலைமை இல்லாமல், சரியான நேரத்தில் ஒரு கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்க ஜனாதிபதி தவறியது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா, சிவில் சமூக அமைப்புகள், மற்றும் ஏனைய பங்குதாரர்கள் தங்களது பாரிய கரிசணையை வெளிப்படுத்துகின்றனர். பொதுமக்கள் நம்பிக்கை, நிதிப் பொறுப்புடைமை மற்றும் வலுவான மேற்பார்வை ஆகியவை அரசியலமைப்பின் அடிப்படையில் கட்டாயமானவையாக மட்டுமல்ல, அவசரமாக தேவைப்படும் இக்கட்டான தருணத்தில் இத்தாமதம் நிகழ்ந்துள்ளது என குறிப்பிட்டு கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், சமூக அபிவிருத்தி நிலையம், மன்னார் பெண்கள் அபிவிருத்திப்பேரவை, பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்பன உள்ளடங்கலாக 17 சிவில் சமூக அமைப்புக்களும் அம்பிகா சற்குணநாதன், கௌதமன், ஏர்மிஸா ரீகல், ரூக்கி பெர்னாண்டோ, கலாநிதி வின்யா ஆரியரத்ன ஆகியோர் உள்ளடங்கலாக 10 மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கணக்காய்வாளர் நாயக அலுவலகம் ஜனநாயக ஆட்சியின் பிரதானமான அடித்தளங்களில் ஒன்றாகும். இலங்கையின் உயரிய கணக்காய்வு நிறுவனமாக, அரசாங்கத்தின் நிதிப் பயன்பாடு, நிர்வாகம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை சுயாதீனமாக கணக்காய்வு செய்வதன் மூலம் பொதுச் சொத்துகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. வலுவானதும் சுதந்திரமானதுமான கணக்காய்வாளர் நாயகம் ஒருவர், அரசாங்கத்தின் செலவினங்களை பாராளுமன்றமும் பொதுமக்களும் உன்னிப்பாகப் பரிசோதிப்பதற்கும், முறைகேடுகளைக் கண்டறிவதற்கும், நிதி முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கும், பொது வளங்கள் ஒப்படைக்கப்பட்டவர்களின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் உதவுகிறார். நிரந்தரமாக நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நிலையில், முழு அரச கணக்காய்வு அமைப்பின் செயல்திறன், அதிகாரம் மற்றும் சுயாதீனம் பலவீனப்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக செயல்திறனின்மை, தவறான நிர்வாகம் மற்றும் ஊழலுக்கான வாய்ப்பும் உருவாகிறது.
இலங்கை தொடர்ந்து எதிர்கொள்ளும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த நிறுவன வெற்றிடம் (institutional vacuum) குறிப்பாக மிகவும் ஆபத்தானது. அவசர நிவாரண முயற்சிகள், மனிதாபிமான உதவிகள் மற்றும் குறிப்பிடத்தக்க பொது மற்றும் வெளிநாட்டு நிதி திரட்டலைத் தூண்டியுள்ள ‘தித்வா’ சூறாவளியின் தாக்கங்களுக்கு நாடு தற்போது பதிலளித்து வருகிறது. பேரழிவுக்கான பதிலளிப்பு மற்றும் மீட்புச் செயற்பாடுகள் இயல்பாகவே அவசரக் கொள்வனவுகள், அவசரச் செலவினங்கள் மற்றும் பல அரச நிறுவனங்களுக்கு இடையேயான சிக்கலான நிதிப் பரிமாற்றங்களை உள்ளடக்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலைகளில், வளங்கள் வெளிப்படையாக ஒதுக்கீடு செய்யப்படுவதையும், திறமையாகப் பயன்படுத்தப்படுவதையும், தாமதமின்றி அல்லது திசைதிருப்பப்படாமல் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்றடைவதையும் உறுதிப்படுத்த, வலுவான மேற்பார்வைக் கட்டமைப்புகள் இன்றியமையாதவை. பொதுப் பொறுப்புடைமை மிகவும் முக்கியமான நேரத்தில், நிரந்தரமாக நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகம் இல்லாதது, பேரழிவு தொடர்பான நிதிகளின் சரியான நிதி முகாமைத்துவம், விநியோகம் மற்றும் கண்காணிப்பு மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்துகிறது.
இலங்கை அரசியலமைப்பு, பொது நிதியின் நம்பகமான மேற்பார்வையை உறுதி செய்வதற்காகவே, நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டில் இருந்து விலக்கப்பட்ட ஒரு சுதந்திரமான அதிகாரியாகவே கணக்காய்வாளர் நாயகத்தை அங்கீகரிக்கிறது. எனினும், ஏப்ரல் 2025 இல் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்றதிலிருந்து, குறுகிய கால இடைக்கால நியமனங்களின் மீது நீண்ட காலமாக நாடு சார்ந்திருப்பதை நாம் அவதானிக்கின்றோம். சரியான நேரத்தில் நிரந்தர நியமனம் செய்யாமல், மீண்டும் மீண்டும் இவ்வாறு தற்காலிகமாக நீடிப்பு வழங்கும் இந்த நடைமுறை, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நிறுவன சுயாதீனத்தை சிதைக்கவும், அச்சமோ தயவோ இன்றி தனது மேற்பார்வையைச் செய்யும் அதன் திறனைப் பலவீனப்படுத்தவும் அச்சுறுத்துகிறது. இடைக்கால நியமனங்கள் இயல்பாகவே நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதால், பயனுள்ள கணக்காய்வு பணிகளுக்குத் தேவையான நம்பகத்தன்மை, நிபுணத்துவம் மற்றும் சுயாதீனத்தை பாதிக்கக்கூடும்.
நாடு நிதியாண்டின் இறுதிக் கட்டத்தில் இருப்பதன் மூலம் இந்த தாமதம் மேலும் சிக்கலாகிறது. இது பொது நிறுவனங்கள் தமது கணக்குகளை இறுதி செய்து வருடாந்திர கணக்காய்வு அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டமாகும். இந்தச் செயற்பாட்டில் நிலைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் பொதுத் துறை முழுவதுமான பொறுப்புடைமை ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில், கணக்காய்வாளர் நாயகம் வழிகாட்டுதல், மீளாய்வு மற்றும் இந்தச் செயன்முறையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியப் பங்கை வகிக்கிறார். நிரந்தரமாக நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நிலையில், முழு கணக்காய்வு சுழற்சி துண்டிக்கப்பட்டதாகவும் பலவீனமாகவும் மாறும் அபாயம் உள்ளது. இது மேற்பார்வையைத் தடுத்து நிறுத்துவதுடன், பொது நிதிப் பொறுப்புடைமையின் ஒருமைப்பாட்டையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. பொது நிறுவனங்கள் மற்றும் பொதுச் செலவினங்கள் மீதான மேற்பார்வையில், இந்தக் கட்டத்தில் ஏற்படும் பொறுப்புடைமை சுழற்சியின் சிதைவு (accountability chain) பாரிய பாதுகாப்பற்ற தன்மைகளை உருவாக்குகிறது குறிப்பாக நிதிக் கட்டுப்பாடு (fiscal discipline), வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நம்பிக்கை மிகவும் முக்கியமாகத் தேவைப்படும் ஒரு தருணத்தில் இது நிகழ்கிறது.
முன்னாள் தலைமை கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள், பாரிய அரசியல் மந்தநிலையையும், ஆட்சியியல் தோல்வியையும் சுட்டிக்காட்டுகின்றன. இந்தப் பதவி தொடர்பான தெளிவான அரசியலமைப்பு முக்கியத்துவம் இருந்தபோதிலும், நியமன செயல்முறை நீடித்ததாகவும், தெளிவற்றதாகவும் உள்ளது. அரசியல் விருப்பம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அர்ப்பணிப்பு குறித்து பாரிய கேள்விகளை எழுப்புகிறது. இந்த நிலைமை, அரசியல் மயமாக்கலுக்கு எதிரான பாதுகாப்பாகச் செயல்படவும், வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான செயல்முறைகள் மூலம் முக்கிய சுயாதீன அலுவலகங்கள் நிரப்பப்படுவதை உறுதி செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு கூடுதல் பொறுப்பை ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL), சிவில் சமூக அமைப்புகள் (CSOs) மற்றும் கையொப்பமிட்ட பிற நிறுவனங்கள், கணக்காய்வாளர் நாயகம் போன்ற அரசியலமைப்பு ரீதியாக சுயாதீனமான அலுவலகங்களுக்கான நியமனங்களை நிர்வகிக்கும் தெளிவான, பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அளவுகோல்களுக்கான அவசரத் தேவையை வலியுறுத்துகின்றன. தொழில்முறை திறன், சிரேஷ்டத்துவம், நேர்மை மற்றும் நிரூபிக்கப்பட்ட சுயாதீனத் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வெளிப்படையான அளவுகோல்கள், நியமன செயல்முறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும், மேற்பார்வை நிறுவனங்களில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணவும் அவசியம். தெளிவான தரநிலைகள் அரசியலமைப்பு பேரவை தனது ஆணையை திறம்பட நிறைவேற்றுவதற்கும், தேவையற்ற செல்வாக்கை எதிர்ப்பதற்கும், நியமனங்கள் பொது நலனுக்கு சேவை செய்வதை உறுதி செய்வதற்கும் உள்ள திறனை வலுப்படுத்துகின்றன.
கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறுவது ஒரு நடைமுறை மேற்பார்வை அல்ல; இது தொலைநோக்கு தாக்கங்களைக் கொண்ட ஒரு கணிசமான ஆட்சியியல் குறைபாடு ஆகும். பொருளாதார ஸ்திரமின்மைஇ நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரித்த பேரிடர் அபாயத்தை எதிர்கொள்ளும் நேரத்தில்இ இலங்கை பலவீனமான அல்லது சமரசம் செய்யப்பட்ட கணக்காய்வு மேற்பார்வையை ஏற்க முடியாது. வலுவான பொது நிதி முகாமைத்துவம், பயனுள்ள ஊழல் எதிர்ப்பு பாதுகாப்புகள் மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய பேரிடர் மீட்பு அனைத்தும் முழுமையாக அதிகாரம் பெற்ற மற்றும் சுயாதீனமான உயரிய கணக்காய்வு நிறுவனத்தைச் சார்ந்துள்ளது.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL), சிவில் சமூக அமைப்புகள் (CSOs) மற்றும் கையொப்பமிட்ட பிற நிறுவனங்கள், ஜனாதிபதி மற்றும் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளையும், வெளிப்படையான மற்றும் அரசியலமைப்பு ரீதியாக உறுதியான செயல்முறையின் மூலம் பொருத்தமான தகுதிவாய்ந்த, சுயாதீனமான கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதை உறுதி செய்ய மேலும் தாமதமின்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றன. இந்த முக்கியமான நிறுவனத்தின் முழுமையான செயல்பாட்டை மீட்டெடுப்பது, ஜனநாயக பொறுப்புணர்வை நிலைநிறுத்துவதற்கும், பொது வளங்களைப் பாதுகாப்பதற்கும், அரசு நிறுவனங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அவசியம்.
கையொப்பமிட்டவர்கள்:
Ambitious Institution for Moral Generation
Association of War Affected Women (AWAW)
Centre for Human Rights and Development
Centre for Policy Alternatives
Child Vision Sri Lanka – Puttalam
Eastern Social Development Foundation (ASDF)
Institute of Social Development
Mannar Women's Development Federation
Muslim Women Development Trust
Rural Development Foundation
Transparency International Sri Lanka
Woman Lanka Network
Women and Media Collective
Women's Action Network
Ambika Satkunanathan
Peter Rezel
Ruki Fernando
Sandun Thudugala
Sheila Richards
Sudaraka Arthanayake
Dr. Vinya Ariyaratne











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM