ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை மட்டு தலைமையக பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (16) இரவு கைதுசெய்துள்ளனர்.
கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த 21, மற்றும் 25 வயதுடைய இரு ஆண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து குறித்த விடுதியை பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயசிங்க மற்றம் ரதன் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழு முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு தங்கியிருந்து இருவரில் ஒருவரிடமிருந்து ஒரு கிராம் 800 மில்லி கிராம் ஜஸ் போதைப்பொருளும் , மற்றவரிடம் இருந்து ஒரு கிராம் 500 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கொக்குவில் சிவன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கடந்த மாதம் 29 ம் திகதியில் இருந்து தங்கு விடுதியில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி தங்கி வந்துள்ள நிலையில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மற்றையவர் கடந்த 5ம் திகதி அந்த விடுதிக்கு சென்று பிரதான சந்தேக நபருடன் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM