இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி, சிறைச்சாலை அதிகாரி போன்று போலி அடையாள அட்டைகளை தயாரித்த நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

17 Dec, 2025 | 03:43 PM
image

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஆகியவர்களைப் போன்று போலி அடையாள அட்டைகளை தயாரித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (16) அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், சந்தேக நபரிடம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனை கருத்தில் கொண்ட நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டுள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள நபரொருவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபர் கடந்த 03 ஆம் திகதி பாணந்துறை நகரத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் வைத்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54
news-image

துணை மருத்துவப் பட்டதாரிகளுக்கு அரச நியமனம்...

2026-01-12 18:03:56
news-image

ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணித்...

2026-01-12 17:20:54
news-image

இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல்...

2026-01-12 17:19:16