தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார்.
அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரபிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு, ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்' என தெரிவித்தார்.
இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கிய நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்யுமாறு 15-12-2025 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதித்து மட்டு.மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தேரருக்கு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தேரர் இன்று புதன்கிழமை 3 சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் முன்நகர்வு பத்திரம் ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சரணடைந்ததையடுத்து, நீதிபதி தேரை தலா ஒரு இலட்சம் ரூபாய் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
அதேவேளை பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் கொண்ட பெரும் படையுடன் நீதிமன்றத்துக்கு தேரர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM