யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து அட்டகாசம் புரிந்த வன்முறை கும்பலிடம் இருந்து இளம் தாயையும் குழந்தையையும் மீட்க சென்ற முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மண்டைதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றின், கணவர் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற நிலையில் , மனைவியும் அவர்களது சிறு குழந்தையும் வீட்டில் தனியாக இருந்த போது நள்ளிரவு வேளை மூவர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
வீட்டில் இருந்த பெண் , அபயக்குரல் எழுப்பிய வேளை உதவிக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் முதியவரும், மற்றுமொரு வீட்டில் வசிக்கும் வயோதிப தம்பதிகளும் விரைந்துள்ளனர்.
அதன் போது முதியவர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்ட போது, அவரது கை விரல் ஒன்று துண்டாட்டப்பட்டுள்ளது. அத்துடன் வயோதிப தம்பதியினரில் முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்டு, தம்பதியினரை முழங்காலில் இருந்தியுள்ளனர்.
வீட்டினுள் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நின்று அட்டகாசம் புரிந்த பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் கடற்படை இணைந்து கடமையில் நிற்கும் நிலையில் மண்டைதீவுக்குள் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, வன்முறைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாதை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM