வெள்ளத்தால் வீதியோரத்தில் வசிக்கும் வவுனியா பீடியாபாம் மக்கள்

18 Dec, 2025 | 06:24 AM
image

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வீதியோரத்தில் பீடியாபாம் மக்கள் வசித்து வருகின்றனர்.

சுமார் 17 குடும்பங்களே இவ்வாறு தற்காலிகமாக எதுவித அடிப்படை வசதியும் இன்றி வசித்து வருகின்றனர்.

வவுனியாவில் 1975ம் ஆண்டு படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் குறித்த கிராமம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தால் குறித்த கிராமமே நீரில் மூழ்கியதுடன், மக்களின் உடமைகள் எல்லாம் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

மேலும் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வயல்கள், தோட்டங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், கால்நடைகளும் இறந்துள்ளன.

இந்நிலையில் இவ்வாறான வெள்ள அனர்த்தால் தொடர்ந்தும் தமது உயிரையும் உடமையையும் பாதுகாக்க முடியாதுள்ளதாக தெரிவித்த இம்மக்கள்,  தங்களிற்கு வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் காணியினை தந்துதவுமாறு வேண்டுகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த கிராம மக்களிற்கு பாதுகாப்பான ஒரு இடத்தில் குடியமர்த்துவதற்கு ஏற்றவகையில் இடத்தினை தெரிவு செய்யுமாறு தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20