டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கான ரிட்ஸ்-கார்ல்டன் யோட் கலக்ஷனின் கன்னிப் பயணத்தை கையாள்வதன் மூலம் எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடையாளப்படுத்தி நிற்கிறது.
உலகப் புகழ்பெற்ற, அதி-சொகுசு கப்பல் வகைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்கும், உயர்தரமான, உலகளாவிய கப்பல் பயணப் பிரிவில் நாட்டின் நற்பெயரை உயர்த்துவதற்கும், இலங்கையை ஆடம்பர உல்லாசப் பயணிகளுக்கு ஏற்ற, பல துறைமுக இடமாக நிறுவுவதற்கும் எயிட்கன் ஸ்பென்ஸின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த ஆரம்ப வருகை பிரதிபலிக்கிறது.
சர்வதேச அளவில் அதன் ஒப்பற்ற நேர்த்தில் மற்றும் நவீன ஆடம்பரத்திற்காக புகழ்பெற்று விளங்கும் ரிட்ஸ்-கார்ல்டன் யோட் கலக்ஷன், ஒரு தனியார் அதிநவீன உல்லாசப் படகின் பிரத்தியேகத் தன்மையினை ரிட்ஸ்-கார்ல்டன் தரச்சின்னத்தின் புகழ்பெற்ற தன்னிகரற்ற சேவையுடன் இணைக்கும் ஒரு முதன்மையான அனுபவத்தை வழங்குகிறது.
இலங்கை கடற் பரப்பில் இந்த உல்லாசப் படகுத் தொகுதியின் வருகை, கப்பல் பயணப் பிரிவில் ஒரு புதிய மக்கள்பிரிவை ஈர்ப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறித்து நிற்பதுடன், இது உயர்நிலை, அறிவார்ந்த பயணிகளை நாட்டுக்கு அழைத்துவரும். எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ் நிறுவனமே கொழும்பு மற்றும் காலிக்கான இந்த அழகிய பயணங்களுக்கான உத்தியோகபூர்வ கடற்கரை சுற்றுலா வழங்குநராக விளங்குகிறது.
அண்மைய ஆண்டுகளில், ஆடம்பர கப்பல் பிரிவை மேம்படுத்துதல், புகழ்பெற்ற தரச்சின்னங்களுடன் உறவுகளை வளர்த்தல் மற்றும் உயர்தரம்வாய்ந்த கடல் பயணங்களுக்கு ஏற்ற இடமாக இலங்கையின் திறனை வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் நிறுவனம் மிகுந்த முக்கியத்துவத்தை அளித்துள்ளது.
ரிட்ஸ்-கார்ல்டன் யோட் கலக்ஷனின் இந்த வருகையானது, இலங்கை சுற்றுலா துறையை மேம்படுத்துவதில் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஒரு சிறந்த சான்றாகும்.
ரிட்ஸ்-கார்ல்டன் யோட் கலக்ஷனின் இலங்கைக்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைகுறித்து எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. நளின் ஜயசுந்தர கருத்து தெரிவிக்கையில், “ரிட்ஸ்-கார்ல்டன் யோட் கலக்ஷன் மேற்கொண்டிருக்கும் அவர்களின் இந்த கன்னிப் பயணத்தில் இலங்கைக்கு வரவேற்பதில் நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த மைல்கல் இலங்கையை ஆடம்பர சொகுசு கப்பல் பயணப் பிரிவில் நிலைநிறுததுவதில் எங்கள் குழுவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
குறிப்பாக இதுபோன்ற ஒரு முக்கியமான தருணத்தில், அதிக நிகர மதிப்புடைய பயணிகளை தனித்தன்மையான, பிரத்தியேகமாக நிர்வகிக்கப்பட்ட கடற்கரை உல்லாசப் பயணங்கள் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை அனுபவிக்கக் கொண்டுவரும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இடமாக நமது நாட்டை அங்கீகரிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.” எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ் நிறுவனமானது இலங ;கையின் முதன்மையான சுற்றுலாத் தல முகாமைத்துவ நிறுவனம் என்ற வகையில் முன்னணியில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நிறுவனம் உயர்நிலை பயணப் பிரிவை விரிவுபடுத்துவதற்கான நீண்ட பயணத்தில் முதல் படியை எடுத்து வைத்துள்ளது. சொர்க்கபுரியாக திகழும் எமது நாட்டின் மறக்க முடியாத நினைவுகளுடன் விருந்தினர்கள் நாட்டிலிருந்து திரும்பிச் செல்வதை உறுதி செய்யும் தனித்துவமான, கலாசார செலுமை மிக்க தனியார் சுற்றுப்பயணங்களை உருவாக்குவதில் எமது அர்ப்பணிப்பு என்றும் இருக்கும்" என்று நிறுவனத்தின் தலைவர் திருமதி ஸ்டாக்ஷினி ஜயவர்தன தெரிவித்தார்.
ஆடம்பர பயணத்திற்கான தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான இடமாக இலங்கையின் நற்பெயரை வலுப்படுத ;தும் இந்த உல்லாசப் படகின் வருகையானது குறிப்பிடத்தக்க சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ரிட்ஸ்-கார்ல்டன் விருந்தினர்களுக்கு விதிவிலக்கான கடலோர அனுபவங்களை வழங்க எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ் எதிர்பார்த்துள்ளதுடன், உலகின் முன்னணி உல்லாச கப்பல்களை இலங்கைக்கு தொடர்ந்தும் ஈர்க்கும் நிலையிலும் உள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM