கேரக்டருக்காக மொட்டையடித்துக் கொண்ட பூர்ணா

Published By: Robert

20 Aug, 2017 | 01:03 PM
image

தான் நடிக்க ஒப்புக்கொண்ட கேரக்டருக்காக நடிகை பூர்ணா மொட்டையடித்துக் கொண்டார். இது குறித்து அவரிடம் கேட்ட போது,‘ இயக்குநர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொடி வீரன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் திரைக்கதையில்இடம்பெறும் ஒரு காட்சிக்காக இயக்குநர் என்னை மொட்டையடித்துக் கொள்ளச் சொன்னார். பொதுவாக இது போன்ற தருணங்களில் ஸ்பெஷல் மேக்கப் மூலம் மொட்டையடிப்பது காண்பிக்கப்படும். ஆனால் இயக்குநர் நம்பகத்தன்மைக்காகவும், திரைக்கதையின் வலிமைக்காகவும் என்னை மொட்டையடித்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்காக மொட்டையடித்துக் கொண்டு நடித்திருக்கிறேன். இப்படத்தின் படபிடிப்பு நிறைவுற்றது. விரைவில் இந்த படத்தினை திரையில் காணலாம்’ என்றார்.

சசிகுமார் நடிக்கும் கொடி வீரன் படத்தில் வில்லியாக நடிக்கிறாராம் பூர்ணா. அத்துடன் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மஹிமாவும், தங்கையாக சனுஷாவும் நடித்திருக்கிறார்கள்.இதன் படபிடிப்பு அண்மையில் முடிவடைந்திருப்பதால் படத்தின் ஏனைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18