அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரு துப்பாகிதாரிகளில் உயிர் பிழைத்த துப்பாகிதாரி நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மற்றொரு துப்பாக்கிதாரியான அவரது 50 வயதுடைய தந்தை சஜித் அக்ரம், சம்பவ இடத்தில் பொலிஸார் நடந்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
சிட்னி நகரின் மிகவும் பிரபலமான போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை யூதர்களின் ஹனுக்கா நிகழ்வில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் சிறுமி ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவாகும் என குறிப்பிடப்படுகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM