தீக்காயங்களுக்குள்ளான காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Published By: Digital Desk 2

17 Dec, 2025 | 12:32 PM
image

அநுராதபுரத்தின் மிஹிந்தலை - சீப்புகுளம், அம்பகஹவெல பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான காட்டு யானை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இடது காலில் காயமடைந்த நிலையில் அநுராதபுரத்தின் மிஹிந்தலை பகுதியில் சுற்றித் திரிந்த போது, கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை  பந்துலகம வனவிலங்கு கால்நடை அலுவலகத்தால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர், ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறித்த யானையை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் குறித்த யானை சமீபத்தில் சீப்பு குளம் பகுதிக்கு  சென்றுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் காட்டு யானை மீது தீ வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் காட்டு யானையை தேடி கண்டுபிடித்து பந்துலகம கால்நடை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் கால்நடை மருத்துவர் உதேஷிகா மதுவந்தி மற்றும் கால்நடை ஊழியர்கள் உள்ளிட்டவர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை (16) காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.


மேலும் காட்டு யானை மீது தீ வைத்த நபர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக   வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெஃப்ரி பாவா - மூனமல் விருது...

2026-07-22 19:13:47
news-image

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை...

2026-07-22 19:16:23
news-image

செம்மணி புதைகுழி அகழ்வு: 40ஆவது நாளில்...

2026-07-22 19:09:26
news-image

2 கோடி ரூபா பணத்துடன் இரு...

2026-07-22 18:45:15
news-image

2023 முதல் 2026 மார்ச் வரை...

2026-07-22 18:39:34
news-image

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய 4 பேர்...

2026-07-22 18:00:52
news-image

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான 50 வினாக்கள்...

2026-07-22 17:36:01
news-image

விடைபெறுகிறார் சீனத்தூதுவர்

2026-07-22 17:35:45
news-image

முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக...

2026-07-22 17:11:45
news-image

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி குறித்து...

2026-07-22 17:11:08
news-image

புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையைப் பாதுகாத்து சிறிய...

2026-07-22 17:10:52
news-image

நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல...

2026-07-22 18:47:49