ஒவ்வொரு கிராமத்திலும் சமூக அபிவிருத்திச சபைகளை நிறுவுவதன் மூலம் ‘சமூக சக்தி’ திட்டம் தரை மட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களின் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘சமூக சக்தி’ தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்துவதுடன் இணைந்ததாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்கான பயிற்சித் திட்டத் தொடரின் மற்றொரு கட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (16) ரன்மினிதென்ன டெலி சினிமா கிராமத்தில் ஆரம்பமானது.
இந்த திட்டம் இன்று புதன்கிழமை (17) நடைபெறும்.
மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு சமூக சக்தி தேசிய திட்டத்தை செயல்படுத்தும் போது அரச அதிகாரிகள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள், சமூக அபிவிருத்தி சபைகளை நிறுவுதல் மற்றும் சமூக வலுவூட்டலுக்காக அரச அதிகாரிகளாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் சமூக சக்தி செயலகம் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு, 09 மாகாணங்களில் செயல்படுத்தப்படுகிறது.இது வரை 08 மாகாணங்களில் பயிற்சிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM