அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Published By: Digital Desk 2

17 Dec, 2025 | 11:39 AM
image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது, இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், 

“கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 73.4 சதவீத மக்களுக்கும்  , அனுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட70.05 சதவீத மக்களுக்கும் , இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 68.39% சதவீத மக்களுக்கும், மாத்தளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 65.28 சதவீத மக்களுக்கும் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 61.42 சதவீத மக்களுக்கும் இதுவரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் இந்த உதவித்தொகை வழங்கல் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது. இதனை துரிதப்படுத்த அதிகாரிகள் தற்போது தலையிட்டு வருகின்றனர். 

அத்தோடு, இது தொடர்பான சிக்கல்களைக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அனர்த்தத்தினால் சுமார் 22 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.அனர்த்தத்தினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்,  ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை குறித்து அரச அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

இந்த 25,000 ரூபா உதவித்தொகை வழங்கல் நேற்று வரையான நிலவரப்படி 50 சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இது மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடலாம், சில மாவட்டங்களில் இது இன்னும் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்தவே நாங்கள் தலையிட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை...

2026-09-07 12:33:54
news-image

இன்றைய வானிலை 

2026-09-08 06:30:43
news-image

பஸ் லலித் வழங்கிய தகவலுக்கமைய ஹங்வெல்ல...

2026-09-08 06:28:10
news-image

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில்...

2026-09-08 06:17:18
news-image

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர...

2026-09-08 06:14:40
news-image

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்...

2026-09-08 06:03:38
news-image

‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன்...

2026-09-08 05:45:33
news-image

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள்...

2026-09-08 05:39:50
news-image

எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்தாவுக்கான விமான...

2026-09-08 01:09:31
news-image

இந்துமத அதியுயர் பீடத்தை நியமிக்கவுள்ள  இந்துமாமன்றம்

2026-09-08 01:07:11
news-image

எயார்பஸ் விசாரணை நல்லாட்சி காலத்திலேயே ஆரம்பம்;...

2026-09-08 01:02:52
news-image

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2026-09-08 01:00:07