ஹட்டன் ரயில் நிலைய வளாகத்திலும் ரயில் பாதையிலும் கழிவுகளை கொட்டுவோருக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹட்டன்  ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஹட்டன் மல்லியப்பு பகுதியிலும் ஹட்டன் ஓயா ஆற்றுக்கரையோரப்பகுதியிலும்  அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கட்டிடத்தொகுதியில் பின்புறமுள்ள ஹட்டன்  ஓயா ஆற்றிலும் ரயில் கடவையிலும் கழிவுகளை கொட்டுவதனால் சூழல் மாசடைவதுடன் டெங்கு அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து கழிவுகளை  கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹட்டன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.