லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் குழு நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தின் அதிகமாக விரும்பப் படம் அபிமான நடிகராக அஜித் குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான 'மக்கள் ஆய்வு' எனும் அமைப்பு அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கருத்து கணிப்பு நடத்தியது. இக் கருத்துக்கணிப்பு முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளது.

நடிகர்கள் தொடர்பான கருத்துக்கணிப்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகாந்த்துக்கு சிறுவர் முதல் பெரியவர் வரையில் ஆதரவு உள்ளது என்பது அறிந்ததே. ஆனால், அந்த இடத்தை தற்போது அஜித்குமார் தட்டிச்சென்றுள்ளார்.

தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு 16 சதவீதம் பேர் அஜித் தங்களுக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளனர். இதன்மூலம், பிடித்த நடிகர்கள் பட்டியலில் அஜித் முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார். 2ஆவது இடத்தை ரஜினிகாந்த் பிடித்துள்ளார். 15.9 சதம் பேர் ரஜினியை தங்களுக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளனர். இது அஜீத்தைவிட 0.1 சதவீதம் மட்டுமே குறைவாகும்.

9.2 சதவீதம் பெற்ற விஜய்க்கு இக்கருத்துக்கணிப்பில் 3வது இடம் கிடைத்துள்ளது. அதனைதொடர்ந்து கமலஹாசனுக்கு 5.9 சதவீதமும் சூர்யாவுக்கு 4.3 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.