ஹெரொயின் மற்றும் கஞ்சா போதை பொருட்களை தம் வசம் வைத்திருந்த நான்கு இளைஞர்களை கட்டுகாஸ்தோட்டை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய  மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே  கண்டி நகரில் வைத்து இரு சந்தேக நபர்களும் கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து மற்றைய  இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடம் இருந்து 25 மில்லி கிராம் ஹெரொயினையும் மற்றைய மூன்று சந்தேக நபர்களிடம் இருந்து 2,925 மில்லி கிராம் கஞ்சாவையும் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நால்வரும் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 25 முதல் 35 வயதுடையவர்கள் ஆவர்.

குறித்த நால்வரையும்  கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.