ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வனின்  நஞ்சாகும் நிலம் நூலுக்கு விருது

Published By: Vishnu

17 Dec, 2025 | 01:26 AM
image

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் எழுதி  வெளியிட்ட நஞ்சாகும் நிலம் நூல் சிறந்த சூழலியல் நூலுக்கான வடக்கு மாகாணத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூல்  மிக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டு வரும் நாம் சூழல் தொடர்பான எச்சரிகையினை விடுக்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை வலியுறுத்தும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது.

வருடந்தோறும்  இடம்பெறுகின்ற வடக்கு பண்பாட்டு பெரு விழாவில் பல்வேறு துறைகளில் நூல்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டும் கவிதை ,சிறுகதை, ஆய்வு, சூழலியல், என பலதுறைகளில் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த நூல்களில் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு வருது வழங்கப்பட்டுள்ளன.

இந்த  நிகழ்வானது வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது.

பண்பாட்டுப் பெருவிழாவும், பாரம்பரியக் கண்காட்சியும் செவ்வாய்க்கிழமை (16.12.2025) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், கூட்டுறவுத்துறைப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் ஆளுநருடன் பிரதம விருந்தினர்களாகப் பங்கேற்றனர். மேலும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், விருந்தினராக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், பெருந்திரளான கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மறை மாவட்டத்தில் சமூக தொடர்பு...

2026-01-12 19:25:46
news-image

2025 ஆம் ஆண்டுக்கான ஈகில்ஸ் கோல்ப்...

2026-01-12 16:18:13
news-image

கலகலப்பாக அரங்கேறிய ஹைக்கூ கவியரங்கம் 

2026-01-12 08:33:05
news-image

தமிழ் நாட்டில் அயலக தமிழர் தினம்...

2026-01-11 20:04:24
news-image

குர்ஆன் மனனப் போட்டி: பெற்றோர்கள் மற்றும்...

2026-01-11 19:59:22
news-image

சேர் பொன். அருணாச்சலத்தின் 102 ஆவது...

2026-01-11 15:59:30
news-image

வித்தியாசங்களின் நிகழ்வாக கலாமித்ரா விருது விழா

2026-01-10 11:10:06
news-image

EDEX Expo 2026 : கல்வி,...

2026-01-07 14:24:29
news-image

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை...

2026-01-06 17:34:50
news-image

முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு...

2026-01-06 16:08:12
news-image

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் வலையமைப்பு நடவடிக்கைகள்...

2026-01-06 14:31:38
news-image

கலை,கலாசார போட்டிகளில் வாய்ப்பு

2026-01-06 13:36:39