ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரணவை 18 கோடி இந்திய ரூபாவுக்கு கே கே ஆர் வாங்கியது; 

Published By: Vishnu

17 Dec, 2025 | 01:20 AM
image

(நெவில் அன்தனி)

அதிக தொகைக்க விலைபோனவர் கெமரன் கிறீன் இண்டியன் பிறீமியர் லீக் 2026க்கான வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முகாமைத்துவம் ஆதிக்கம் செலுத்தி, அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் கெமரன் கிரீனை 25.20 கோடி இந்திய ரூபாவுக்கு எடுத்தது.

ஐபிஎல் ஏல வரலாற்றில் மிகப் பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் கெமரன் கிறீன் ஆவார்.

அத்துடன் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரணவை 18 கோடி இந்திய ரூபாவுக்கு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் வாங்கியது.

புது டில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் இலங்கை ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவை  4 கோடி இந்திய ரூபாவுக்கு   டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியினரும் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கவை 2 கோடி இந்திய ரூபாவுக்கு லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியினரும் எடுத்தனர்.

ஏலத்தில் கிறீன் வாங்கப்பட்டதன் மூலம், அவர் மிச்செல் ஸ்டார்க்கின் 24.75 கோடி இந்தியா ரூபா விலையை முறியடித்து ஐபிஎல் ஏல வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரரானார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் இடையேயான கடுமையான ஏலப் போட்டியைத் தொடர்ந்து அவரை கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

இந்திய அணியில் இடம்பெறாத திறமைசாலிகளும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

உத்தரபிரதேசத்தின் 20 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரசாந்த் வீர் மற்றும் ராஜஸ்தானின் 19 வயதான விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் கார்த்திக் ஷர்மா ஆகிய இருவரையும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தலா 14.20 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலம் எடுத்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்காவுடனான 19 இன் கீழ்...

2026-01-12 21:34:35
news-image

மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள்...

2026-01-12 19:24:41
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில்...

2026-01-12 02:33:11
news-image

ஷானக்க, ஹசரங்க அபார ஆற்றல் வெளிப்பாடு,...

2026-01-12 02:29:14
news-image

12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ரி20 போட்டியில்...

2026-01-11 22:53:54
news-image

பாகிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானம்

2026-01-11 21:22:56
news-image

நியூ ஸ்டார் கழகத்தின் வெற்றி அலைக்கு...

2026-01-11 20:20:44
news-image

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை -...

2026-01-11 19:34:09
news-image

நியூ ஸ்டார்ஸ் - சோண்டர்ஸ் அணிகள்...

2026-01-09 14:13:59
news-image

பாகிஸ்தானுடனான சர்வதேச ரி20 தொடரை இலங்கை...

2026-01-09 14:06:26
news-image

சிட்னி டெஸ்டில் வெற்றியீட்டி ஆஷஸ் தொடரை...

2026-01-08 23:26:58
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்திய அணியின்...

2026-01-08 16:39:15