'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண ஆளுநரிடம் கேட்டறிந்த அமெரிக்கத்தூதுவர்

Published By: Vishnu

17 Dec, 2025 | 12:52 AM
image

(நா.தனுஜா)

இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கென 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' எனும் பெயரில் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதியம் தொடர்பில் மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்பிடம் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.

'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.

அதேவேளை இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கென 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' எனும் பெயரில் அரசாங்கத்தினால் விசேட நிதியம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை (15) மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்பை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் தொடர்பில் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.

அத்தோடு பேரனர்த்தத்தை அடுத்து அமெரிக்கா வழங்கிய 2 மில்லியன் டொலர் பெறுமதியான உடனடி நிவாரண உதவிகள், சி-130ஜே விமானத்தின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட உட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன தொடர்பிலும் மேல்மாகாண ஆளுநரிடம் விளக்கமளித்ததாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்க நிறுவனங்கள், பரோபகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இலங்கையின் மீட்சிக்கு அவசியமான உதவிகள், ஆலோசனைகள் மற்றும் வளங்கள் எனப் பல்வேறு உதவிகளை வழங்கிவருவதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள் - கட்சி...

2026-01-25 17:00:25
news-image

மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு...

2026-01-25 16:59:19
news-image

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக வெகுஜன...

2026-01-25 16:58:45
news-image

விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷ் போதைப்பொருள்...

2026-01-25 16:57:41
news-image

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க்...

2026-01-25 16:56:25
news-image

அரசியல் தலைவர்கள் தூக்கிபோடு எழும்பு துண்டுகளுக்கு...

2026-01-25 16:56:07
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல்: 06...

2026-01-25 16:55:43
news-image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்தல்...

2026-01-25 16:53:18
news-image

முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான...

2026-01-25 16:33:04
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் ;...

2026-01-25 16:40:55
news-image

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2026-01-25 16:52:56
news-image

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு - பொலிஸார்...

2026-01-25 16:34:57