குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட பாராளுமன்ற அமர்வுகள்

Published By: Vishnu

16 Dec, 2025 | 10:09 PM
image

(எம்.மனோசித்ரா)

அனர்த்த நிவாரணங்களுக்காகவும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காகவும், 500 பில்லியன் ரூபா குறை நிரப்பு மதிப்பீட்டு தொகை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக வியாழக்கிழமை (18) மற்றும் வெள்ளிக்கிழமை (19) விசேட பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

18 மற்றும் 19ஆம் திகதிகளில் விசேட பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அனர்த்தத்தின் பின்னர் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் செலவிடுவதற்காக 72.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியே தற்போது செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அடுத்த ஆண்டிலும் இந்த அனர்த்த நிவாரணங்களுக்காகவும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காகவும், புதிய வீடுகளை அமைப்பதற்காகவும் மேலதிகமாக 500 பில்லியன் ரூபா குறை நிரப்பு மதிப்பீட்டு தொகை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

18ஆம் திகதி இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, விவாதித்து 19ஆம் திகதி மாலை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அனர்த்த நிலைமைகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே இவ்வாறு விசேட பாராளுமன்ற அமர்வினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45