வானத்தில் பெண் ஒருத்தி தோன்­றினாள் அவள்  கதி­ர­வனை ஆடை­யாக  அணிந்­தி­ருந்தாள். நிலவு அவ­ளது கால­டியில்  இருந்­தது. பன்­னிரு விண்­மீன்­களை முடி­யாக  சூடி­யி­ருந்தாள். 

இற்­றைக்கு  இரண்­டா­யிரம்  ஆண்­டு­க­ளுக்கு  முன்பு  கலி­லே­யாவில் நாசரெத் என்னும் ஊரில் வாழ்ந்த ஒரு சாதா­ர­ணபெண் மரியாள், தேவ­தூதர் அவள்முன் தோன்றி  இந்த உலகை பாவ­மான பெரும் கொடு­மையில் இருந்து  மீட்க  இறை­ம­கனை  கருத்­த­ரித்து பெற்­றெ­டுக்க இறைவன்  உன்னை  தேர்ந்­து­கொண்­டுள்ளார். இதில் உனக்கு   உடன்­பாடா என வின­விய போது கன்­னி­கை­யான மரியாள் எந்­த­வித தயக்­கமும் இன்றி அவ்­வார்த்­தையை ஏற்­றுக்­கொண்டாள்.  அவ­ளு­டைய  தாழ்ச்­சியும் அர்ப்­ப­ணிப்­புமே கிறிஸ்து  இவ்­வு­ல­கிற்கு  வர கார­ண­மா­னது. 

ஜாதி, மதம், பேதம் பாராமல் தம்மை நாடி வரும் பக்­தர்­களை  அர­வ­ணைக்கும் நம் அன்னை மரியாள் ஆரோக்­கிய மாதா­வாக வத்­தளை  மாபோ­லையில் எழுந்­த­ரு­ளி­யுள்ளார். 

இற்­றைக்கு  200 வரு­டங்­க­ளுக்கு முன்பு  இவ்­வா­லயம்  அமைந்­தது.  இவ்­வா­லத்தின்  வர­லாறு சுவா­ரஸ்­ய­மிக்­கது. 

இவ்­வா­ல­யத்தின்  இருக்கும் திருச்­சு­ரூ­ப­மா­னது 1815 ஆம்  ஆண்டு ஆங்­கி­லேயர் எமது நாட்டை ஆட்சி செய்த காலப்­ப­கு­தியில் போர்த்­துக்­கேயர் குழு­வி­னரால் வழி­பட்டு  வந்த அன்­னையின்  திருச்­சு­ரூபம்  வத்­தளை  மாபோ­லையில் வசித்து வந்த “மைத்­திரி நோனா” என்­ப­வ­ருக்கு  வழங்­கப்­பட்­டது. 

மைத்­திரி நோனா  தமது சொந்த இடத்தில்  தற்­கா­லிக  கூடாரம்  அமைத்து தமது குடும்­பத்­தினர் மற்றும்  அய­ல­வர்­க­ளுடன் சேர்ந்து அன்­னையின் திருச்­சு­ரூ­பத்தை வழி­பட்டு வந்­துள்ளனர்.  இந்த தற்­கா­லிக  கூடா­ரமே  தற்­போது  ஆல­வி­ருட்­ச­மாக  காட்­சி­தரும் பெரிய ஆல­ய­மாக  உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. 

இவ்­வ­ர­லாற்று நிகழ்வு “1834 ஆம் ஆண்டு  ஜே.சிலோன்  கெச­டியர்” எனும்  பெய­ரு­டைய  புத்­த­கத்தில் இவ்­வா­லயம்  உரு­வா­ன­தற்­கான  சான்­றுகள் உள்­ளன. 

 அவை  பின்­வ­ரு­மாறு  கொழும்பு – நீர்­கொ­ழும்பு வீதியில்  கொழும்­புக்கு 6 மைல் தொலைவில் மாபோலை  எனும் கிரா­மத்தில் 1834 ஆம் ஆண்­டு­களில்  பெரிய கத்­தோ­லிக்க தேவா­லயம் இருந்­தது. இவ்­வா­ல­யத்தைக் கட்­டி­யெ­ழுப்ப கிட்­டத்­தட்ட  18 ஆண்டு காலம் எடுத்­தது. இவ்வாறு ஜெ.சிலோன்  கெச­டி­யரில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

எனவே 1816 ஆம் ஆண்டு  காலப்­ப­கு­தியில் மாபோலை  கிரா­மத்தில் சிறிய ஆலயம் இருந்­த­தற்­கான  சான்­றுகள் அவை. 

நாட்டின்  200 வரு­டங்கள்  பழைமை வாய்ந்த  ஆலயம்  அமைந்­த­மைக்கு அப்­ப­கு­திவாழ் கத்­தோ­லிக்க  மக்­களின் விசு­வா­சமே  கார­ண­மாகும். 

மாபோலை வாழ் தமிழ் பேசும்  கத்­தோ­லிக்­கர்­களின் அய­ராத  முயற்­சி­யினால் கடந்த 2010 ஆம் ஆண்டு அப்­போது  பங்குத் தந்­தை­யாக  சேவை­யாற்­றிய அருட்­தந்தை வில்­பிரட் பிந்து  அடி­க­ளா­ரினால் தமிழ்  மொழியில் திருப்­பலி ஒப்புக் கொடுப்­ப­தற்­கான அனு­மதி கிடைத்­தது. இதன் பய­னாக  பிர­தி­ஞா­யிறு தோறும்  காலை 10.30 மணிக்கு  இவ்­வா­ல­யத்தில்  தமிழ் திருப்­பலி  தொடர்ந்து  ஒப்புக் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

கடந்த  வருடம் ஆலயம் மறு­சீ­ர­மைப்பு  நிறைவு பெற்று  200 ஆவது  ஆண்டு விழா மிகவும்  சிறப்­பாகக்  கொண்­டா­டப்­பட்­டது. 

கடந்த 11 ஆம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­பிக்­கப்­பட்ட  ஆரோக்­கிய அன்­னையின் வரு­டாந்த  திரு­வி­ழா­வா­னது  தொடர்ந்து 9 நாட்கள்  செப­மா­லை­யுடன்  நவநாள் வழி­பா­டுகள் ஒப்­புக்­கொ­டுக்­கப்­பட்­ட­துடன்  இவ்­வா­ல­யத்தின்  வரு­டாந்த திரு­விழா  திருப்­பலி  காலை 7.30 மணிக்கு சிங்­கள மொழி­யிலும்  காலை 10.30  மணிக்கு  தமிழ்  மொழி­யிலும் ஒப்­புக்­கொ­டுக்­கப்­படும். 

 நாளுக்கு  நாள் அதி­க­ரித்து வரும்  மனி­தனின்  தவ­றான  செயற்­பா­டு­க­ளினால் இவ்­வு­லகம் பாவத்தில் அழிவை நோக்­கியே  பய­ணிக்­கின்­றது. இப்­பா­வத்தில் விழாமல்  வாழவும்  அனை­வரும் சமா­தா­னத்தின் இராக்­கி­னியாம் நம் அன்னையின் பரிந்து பேசுதலினால் இந்நாட்டில் சாந்தியும்  சமாதானமும்  நிலவவும்,  பாவத்தை  விட்டு  விலகி  வாழவும்  அனைவரும்  நோய் நொடியின்றி உடல்  நலத்துடன்  வாழ புனித  ஆரோக்கிய  அன்னையிடம்  வேண்டிக்கொள்வோம். புனித ஆரோக்கிய அன்னையே!  இறைவனின்  தாயாரே!  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! 

மரியே வாழ்க.