அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற ரீதியில் பாராளுமன்றக்குழுவே தீர்மானிக்கும் சட்ட நடவடிக்கைகளில் அரசின் தலையீடு இல்லை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

16 Dec, 2025 | 05:17 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தொடர்பில் அமைச்சரவையில் எதுவும் பேசப்படவில்லை. ஆனால் அவர் தொடர்பில் ஏதேனும் தீர்மானம் எடுப்பதாயின் கட்சி என்ற ரீதியில் அதனை பாராளுமன்றக்குழுவே தீர்மானிக்கும். இந்த விடயத்தில் எந்த வகையில் அரசாங்கத்தின் தலையீடு இருக்காது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊடகவியலாளர்களால் இந்த சம்பவம் தொடர்பில் கேட்கப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தொடர்பில் அமைச்சரவையில் எதுவும் பேசப்படவில்லை. அவர் தொடர்பில் ஏதேனும் தீர்மானம் எடுப்பதாயின் கட்சி என்ற ரீதியில் அதனை பாராளுமன்றக்குழுவே தீர்மானிக்கும். இந்த விபத்தினால் அவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, பிரிதொருவரும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து தொடர்பில் 19ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படவுள்ளது. அதற்கமைய எங்கு தவறு இடம்பெற்றிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கூடியதாக இருக்கும். அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியத்துவம் வாய்ந்தாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கே முன்னுரிமை வழங்கப்படும்.

அரசாங்கத்துடன் தொடர்புடையவராகவே இருந்தாலும், தவறிழைத்திருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் அவை தொடர்பில் அவதானம் செலுத்தவும் நாம் தயாராகவுள்ளோம்.

இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாகவே அரசாங்கத்தின் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்பு கூறல் என்பன வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த சம்பவத்தில் பொலிஸ் தரப்பில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளதாக ஒரு சில தரப்பினரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால், பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ், பொலிஸ் உத்தியோக்கத்தர்கள் கடமையை முறையாக செய்யத் தவறியுள்ளனரா என்பது குறித்த விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல விபத்து இடம்பெற்ற போது கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதற்கு அப்பாற்பட்ட விடயங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையவையாகும். சட்ட நடவடிக்கைகளின் போது அரச தரப்பிலிருந்து ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அது குறித்து குற்றஞ்சாட்ட முடியும். ஆனால் இந்த சம்பவத்தில் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

அவரது இரத்த மற்றும் சிறுநீர் மாதிரி குறித்த அறிக்கைகள் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அதற்கு அப்பால் நீதிமன்றத்தால் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அவற்றில் எந்த வகையிலும் அரசாங்கத்தின் தலையீடு காணப்படாது. மாறாக அணுமானங்களின் அடிப்படையில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37