கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் கிச்சா சுதீப்பின் 'மார்க்'

16 Dec, 2025 | 03:55 PM
image

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான கிச்சா சுதீப் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மார்க்' எனும் திரைப்படம் - கொமர்சல் வித் கொமடி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ' எனும் திரைப்படத்தில் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு , குரு சோமசுந்தரம்,  தீப்ஷிகா,  ரோஷினி ஹரி பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சேகர் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜீனிஷ் பி. லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.  எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் விஜய் கார்த்திகேயன் பேசுகையில், '' 'மேக்ஸ்' எனும் பிரம்மாண்ட வெற்றி படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் கிச்சா சுதீப்புடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இந்த திரைப்படத்தில் நடிகர் சுதீப்பின் நகைச்சுவையான நடிப்பினை வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் பல அடுக்குகள் உள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவரும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54
news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45