நடிகர் பொபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

16 Dec, 2025 | 03:53 PM
image

சிறந்த குணச்சித்திர நடிப்பிற்காக தேசிய விருதினை வென்ற நடிகர் பொபி சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான மெஹர் இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் பொபி சிம்ஹா மற்றும் நடிகை ஹிபாப் பட்டேல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழ்- தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை யுவா ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவ கிருஷ்ணா தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் தெலுங்கின் முன்னணி பிரபலங்களான இயக்குநர் வம்சி மற்றும் தணிகலபரணி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே நடிகர் பொபி சிம்ஹா கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான 'இந்தியன் 2' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் அவருடைய நடிப்பில் இந்த ஆண்டில் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை என்பதும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் அவருடைய கலையுலக பயணத்தில் 25 ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்