ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் டொக்டர் சிவராஜ் குமாரின் ' 45 '

16 Dec, 2025 | 03:50 PM
image

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான டொக்டர் சிவராஜ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் '45 'எனும் திரைப்படம்- ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

இயக்குநர் அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் '45 ' எனும் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார்- உபேந்திரா - ராஜ் பி ஷெட்டி - மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூரஜ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 25 ஆம் திகதியன்று இந்த திரைப்படம் கன்னடத்திலும், ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி முதல் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம்,  இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும், வி எஃப் எக்ஸ் தொழில்நுட்பமும் சிறப்பாக இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-08-15 15:43:22
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாரீஸ் கஃபே'...

2026-08-15 15:45:02
news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் இளன்...

2026-08-13 17:16:36
news-image

'ஃபீல் மை லவ்' படத்தின் செகண்ட்...

2026-08-15 09:40:08
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-08-13 17:04:17