கவனம் ஈர்க்கும் 'ஹாட் ஸ்பாட் 2 ' படத்தின் அப்டேட்ஸ்

16 Dec, 2025 | 03:45 PM
image

கடந்த ஆண்டில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான 'ஹாட் ஸ்பாட் ' எனும் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் காணொலி வடிவில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறார்கள்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹாட் ஸ்பாட் 2 'எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி -  ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை கே ஜே பி டாக்கீஸ் மற்றும் ஆன்ட்ஸ் டூ எலிபென்ட்ஸ் சினிமாஸ் கம்பனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.

இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த திரைப்படத்தை படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், தெரிவித்திருக்கும் படக்குழு... படத்தில் இடம் பிடித்திருக்கும் நடிகர்கள் - நடிகைகளை பற்றிய விவரங்களை அவல நகைச்சுவையுடன் கூடிய குரலில் காட்சிப்படுத்தி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறார்கள்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியீட்டை...

2026-09-12 15:42:25
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-09-12 15:41:43
news-image

நடிகை சுமன் ராவ் நடிக்கும் 'தெய்வா'...

2026-09-12 15:39:15
news-image

நடிகர் ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப்...

2026-09-12 15:36:15
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'ஆகாயம்'...

2026-09-12 15:35:54
news-image

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும்...

2026-09-12 15:35:39
news-image

நடிகை முல்லையரசி நடிக்கும் 'பாவை' படத்தின்...

2026-09-12 15:33:58
news-image

‘வைகைப்புயல்’ வடிவேலுவுக்கு இன்று 67ஆவது பிறந்தநாள்!

2026-09-12 11:09:25
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'இம்மார்ட்டல்'...

2026-09-11 17:47:00
news-image

ஒக்டோபரில் வெளியாகும் பொலிவுட் நடிகர் அஜய்...

2026-09-11 17:44:39
news-image

கிஷன் தாஸ் நடிக்கும் 'சி யூ'...

2026-09-11 17:42:04
news-image

நடிகர் சச்சின் நாச்சியப்பன் நடிக்கும் 'சூரியன்...

2026-09-11 17:33:49