ஷார்ஜா வொரியர்ஸை வெற்றிப் பெறச் செய்தார் மதீஷ பத்திரண

16 Dec, 2025 | 02:42 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் திங்கட்கிழமை (15) இரவு நடைபெற்ற ஷார்ஜா வொரியர்ஸ் அணிக்கும் கல்வ் ஜயன்ட்ஸ் அணிக்கும் இடையிலான இன்டர்நெஷனல் லீக் ரி20 கிரிக்கெட் போட்டியில் மதீஷ பத்திரனவின் துல்லியமான பந்துவீச்சு, ஷார்ஜா வொரியர்ஸ் அணியை 11 ஓட்டங்களால் வெற்றிபெறச் செய்தது.

அப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய மதீஷ பத்திரண 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி தனது அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றி ஆட்டநாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஷார்ஜா வொரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

டொம் ஆபெல் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைக் குவித்தார்.

39 ஓட்டங்களைப் பெற்ற ஜேம்ஸ் ரூவுடன் 3ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களை ஆபெல் பகிர்ந்தார்.

அவர்களைவிட ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கிறிஸ் வூட் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்வ் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மொயீன் அலி 45 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 41 ஓட்டங்களையும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

ரஹ்மானுல்லா குர்பாஸ், மொயீன் அலி, மெத்யூ போர்ட் ஆகியோரின் விக்கெட்களை மதீஷ பத்திரண வீழ்த்தினார்.

அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய வசிம் அக்ரம் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55
news-image

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ்...

2026-07-15 17:03:21
news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19
news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10