ஆசிய இளையோர் பரா விளையாட்டில் இலங்கையின் தில்மினி, செனுவர தங்கம் வென்றனர், யூனுஸுக்கு வெண்கலம்

16 Dec, 2025 | 02:05 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழாவில் இலங்கையின் வளர்ந்து வரும் இளைய பரா வீரர்கள் மூவர் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி மூன்று தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்று சரித்திரம் படைத்தனர்.

17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான F40/41 வகைப் பிரிவில் பரா வீராங்கனை தில்மினி உதும்பரா குமாரகே இரண்டு தங்கப் பதக்கங்களையும் 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான T47 வகைப் பிரிவில் பங்குபற்றிய செனுவர சந்திலு ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான T42/T61–64 வகைப் பிரவில் இஷாம் யூனுஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான F40/41 வகைப் பிரிவினருக்கான தட்டெறிதல் போட்டியில் 12.4 மீற்றர் தூரத்தையும் குண்டெறிதல் போட்டியில் 3.69 மீற்றர் தூரத்தையும் பதிவு செய்து தில்மினி உதும்பரா குமாரகே இரண்டு தங்கப் பதக்கங்களை சுவீகரித்தார்.

17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான T47 வகைப் பிரிவில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 12.29 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்த செனுவர சந்திலு, நீளம் பாய்தலில் 4.96 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதேவேளை, இளம் குறுந்தூர ஓட்ட வீரரான இஷாம் யூனுஸ் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான T42/T61–64 வகைப் பிரவினருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம் 01.95 செக்கனில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

துபாயில் கடந்த 7ஆம் திகதிமுதல் 14ஆம் திகதிவரை நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழாவில் 35 ஆசிய நாடுகளைச் சேர்ந்த  மாற்றுத்திறனாளிகள்  பங்குபற்றினர்.

இலங்கையிலிருந்து  9 மாற்றுத்திறனாளிகள் வெவ்வேறு வகைப் பிரிவுகளின் கீழ் தடகளம் (ஆண்கள் 4, பெண்கள் 1), மேசைப்பந்தாட்டம் (ஆண்கள் 2) மற்றும் பட்மின்டன் (ஆண்கள் 2) ஆகியவற்றில் போட்டியிட்டனர்.

இந்த ஒன்பது மாற்றுத்திறனாளிகளும் நேற்று நாடு திரும்பினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-06 20:36:50
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம்...

2026-09-04 20:46:15
news-image

றினோன் - புளூ ஈக்ள்ஸ் அணிகள்...

2026-09-04 13:44:57
news-image

AFC 20இன் கீழ் ஆசிய கிண்ண...

2026-09-04 12:12:27
news-image

இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச்...

2026-09-03 14:15:10
news-image

ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம் 2027க்கான...

2026-09-02 22:49:03
news-image

பிரதான கழகங்கள் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்:...

2026-09-02 18:28:56
news-image

வென்னப்புவை நியூ யங்ஸ் அணிக்கு முதலாவது...

2026-09-01 18:55:51
news-image

முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் -...

2026-09-01 13:30:20
news-image

இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லை' என்ற...

2026-09-01 00:15:17